டால்பின்களை பிடித்து வைக்கக் கூடாது - புதிய சட்டம்
திமிங்கிலம் மற்றும் டொல்பின்களை பிடித்து இனப்பெருக்கம் செய்வது பாரிய குற்றமாகும்.
👤 Sivasankaran4 April 2019 4:45 PM GMT

கனடாவில் டொல்பின்கள் மற்றும் திமிங்கலங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டு சுமார் நான்கு ஆண்டுளுக்கு பின்னர், நாடாளுமன்றின் மீன்வளத்துறை பிரிவினால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமிங்கிலம் மற்றும் டொல்பின்களை பிடித்து இனப்பெருக்கம் செய்வது பாரிய குற்றமாகும் என இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சட்டமூலம் எவ்வித திருத்தங்களும் இன்றி லிபரல் மற்றும் புதிய ஜனநாயக கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இச்சட்டத்தினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும், 2 இலட்சம் அமெரிக்க டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire