Home » உலகச் செய்திகள் » கனடிய பிரதமர் நீதிக்கு துரோகம் இழைத்துள்ளார் - அண்ட்ரூ ஸ்சேர்

கனடிய பிரதமர் நீதிக்கு துரோகம் இழைத்துள்ளார் - அண்ட்ரூ ஸ்சேர்

முறைகேட்டை அம்பலப்படுத்தி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கியதன் மூலம் கனடிய பிரதமர் நீதிக்கு துரோகம் இழைத்துவிட்டார்.

👤 Sivasankaran4 April 2019 5:10 PM GMT
கனடிய பிரதமர் நீதிக்கு துரோகம் இழைத்துள்ளார் - அண்ட்ரூ ஸ்சேர்
Share Post

ஜொடி வில்சன்-ரேபொல்ட் மற்றும் ஜேன் பில்போட் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கனடிய பிரதமர் ட்ரூடோ தனது கட்சியிலிருந்து நீக்கினார்.

இது தொடர்பாக கருத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள, எதிர்க்கட்சி தலைவர் அண்ட்ரூ ஸ்சேர் ஒரு முறைகேட்டை அம்பலப்படுத்தி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கியதன் மூலம் கனடிய பிரதமர் நீதிக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று கூறினார். இது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.