பாரிஸில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கடந்த 2017ஆம் ஆண்டை விட 2018ஆம் ஆண்டில் அதிகளவான போதைப்பொருள் பாரிஸில் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாரிஸ் பொலிஸ் தலைமை அதிகாரியாக பதவியேற்றுள்ள Didier Lallement இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 2017ஆம் ஆண்டில் 559 கிலோ போதைப்பொருள் மொத்தமாக கைப்பற்றப்பட்டிருந்தது. 2018ஆம் ஆண்டில் 186 கிலோ கொக்கைய்ன், 3.7 கிலோ கிராக் போதைப்பொருள் உள்ளடங்களாக மொத்தமாக ஒரு டன் போதைப்பொருள் பாரிஸிற்குள் மாத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது.