மாணவியிடம் பாலியல் துஷ்பிரயோகம் - ஒருவர் கைது
பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
👤 Sivasankaran8 April 2019 3:37 PM GMT

வின்ட்சர் பகுதியில் 10 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் வின்ட்சர் பகுதியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்தநிலையிலேயே குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக 33 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வின்ட்சர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire