மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையப்போவது உறுதி - வைகோ பிரசாரம்
மத்திய அரசு, பெரு நிறுவனங்களின் 2.42 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்கிறது.

ஈரோடு - வெள்ளோட்டில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து, வாக்குகள் கேட்டு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
இந்த பகுதியில் விளை நிலங்களில் உயர் மின் அழுத்த மின் கோபுரம், கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டால் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு பெரு நிறுவனங்களின் ஆதரவு அரசாக உள்ளது. விவசாய கடன், கல்வி கடனை தள்ளுபடி செய்ய முடியாது எனச்சொல்லும் மத்திய அரசு, பெரு நிறுவனங்களின் 2.42 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்கிறது. அவர்களுக்கு 5 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்குகிறது.
மத்தியில் நடைபெறும் மக்கள்விரோத, தமிழ்நாட்டுக்கு விரோதமான அரசினை அகற்ற வேண்டும். தேர்தலுக்குப் பின், மாநில உரிமைகளை மீட்கும் வகையில், மாநிலக் கட்சிகளுடன் இணைந்து ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் இது உறுதி என்றார்.