பொருளாதார சீர்கேடு மற்றும் ஊழலுக்கு எதிராக சூடானின் தலைநகர் கார்டூமில் நேற்று(திங்கட்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், சூடான் ஜனாதிபதி உமர் அல் பஷீர் பதவி விலகவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.