ஒழுங்கான பிரெக்ஸிற்றை உறுதிப்படுத்தவே தாமதம் - தெரேசா மே
பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவே பிரெக்ஸிற்றை ஜூன் 30 வரை...

பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவே பிரெக்ஸிற்றை ஜூன் 30 வரை பிற்போடுவதற்கு தாம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
இன்று பிரஸ்ஸல்ஸில் இடம்பெறும் அவசர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள பிரதமர் மே செய்தியாளர்களிடம் கூறியதாவது;
'ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒழுங்கான முறையில் இயன்றவரை வெகுவிரைவாக வெளியேறுவதையே நான் விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளிலேயே நான் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளேன்.
பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காகவே பிரெக்ஸிற்றை மேலும் பிற்போடுவதற்கான கோரிக்கையை நான் முன்வைத்துள்ளேன்.
பிரெக்ஸிற்றை ஜூன் 30 ஆம் திகதிக்கு பின்னரும் பிரெக்ஸிற்றை பிற்போடுவதில் எனக்கு உடன்பாடில்லை. மே மாதம் 22 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டுமென்பதே எனது இலக்கு என்று கூறினார்.