பரவும் வைரஸ் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வைரஸினால் இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
👤 Sivasankaran15 April 2019 4:02 PM GMT

கனடாவின் ஆறு மாகாணங்களில் மிக வேகமாக பரவி வரும் இந்த வைரஸிற்கு salmonella என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கமானது பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா, சஸ்கச்சுவான், மனிடோபா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய 6 மாகாணங்களில் வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த வைரஸினால் இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை பாதிப்பின்ற அறிகுறிகளாக காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் கனடிய சுகாதாத்துறை அறிவித்துள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire