நோட்ரே டாம் தேவாலய தீ விபத்து - அதிர்ச்சியில் உலக மக்கள்
நோட்ரே டாம் தேவாலய தீவிபத்து மிகவும் கொடூரமானது எனவும் தமது சிந்தனை பிரஸ் மக்களோடும் தீ விபத்தை எதிர்த்துப் போராடும் அவசர சேவை பிரிவினருடனும் உள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் நேற்றையதினம் ஏற்பட்ட தீவிபத்து உலகெங்கும் உள்ள மக்களை ஆழ்ந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.
நோட்ரே டாம் தீவிபத்து தொடர்பாக மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிப்பதாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்ரே டாம் தேவாலய தீவிபத்து மிகவும் கொடூரமானது எனவும் தமது சிந்தனை பிரஸ் மக்களோடும் தீ விபத்தை எதிர்த்துப் போராடும் அவசர சேவை பிரிவினருடனும் உள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேவாலயம் தீப்பற்றி எரிவதை காண்பது மிகவும் கொடூரமாக உள்ளதாகவும், தீயை கட்டுப்படுத்துவதற்கு பறக்கும் நீர் வண்டிகள் பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.