Home » உலகச் செய்திகள் » பொதுமக்களுக்காக புதிய ஆப் - இலங்கை அரசாங்கம்

பொதுமக்களுக்காக புதிய ஆப் - இலங்கை அரசாங்கம்

தொலைப்பேசி அழைப்பு விடுத்து 12 நிமிடங்களுக்குள் குறித்த ஆம்புலன்ஸ் சேவையை விபத்துக்கு உள்ளான நபர் பெற்றுக்கொள்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

👤 Sivasankaran19 April 2019 2:57 PM GMT
பொதுமக்களுக்காக புதிய ஆப் - இலங்கை அரசாங்கம்
Share Post

திடீர் அனர்த்தங்களுக்கு அரச பாதுகாப்புத் துறையினரிடம் உடனடி பிரதிபலனை பெற்றுக்கொள்ள புதிய அப் (Emergency App) ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பாகவே இந்த அப் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த அப் மூலம் உடனடியான ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்புச் சேவை, பொலிஸ் சேவை உட்பட அரச பாதுகாப்பின் அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

தமக்கு ஏற்பட்ட விபத்து தொடர்பில் பொலிஸாருக்கும், இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கும், ஆம்புலன்ஸ் சேவைக்கும் அறியப்படுத்தும் காலம் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் காலம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

1990 அம்பியூலன்ஸ் சேவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. தொலைப்பேசி அழைப்பு விடுத்து 12 நிமிடங்களுக்குள் குறித்த ஆம்புலன்ஸ் சேவையை விபத்துக்கு உள்ளான நபர் பெற்றுக்கொள்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.