வட கொரியா அதிபர் - ரஷ்ய அதிபர் நாளை பேச்சுவார்த்தை
வடகொரிய அதிபர் கிம் ஜாங் தனது சிறப்பு ரெயில் மூலம் வந்து சேர்ந்தார்.
👤 Sivasankaran24 April 2019 4:24 PM GMT

வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் ஏப்ரல் 25-ம் திகதி ரஷியாவின் விலாடிவோஸ்ட்டோக் நகரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் தனது சிறப்பு ரெயில் மூலம் சுமார் 9 மணிநேரம் பயணித்து (ரஷியா நேரப்படி சுமார் 11 மணியளவில்) விலாடிவோஸ்ட்டோக் நகரை வந்தடைந்தார்.
ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்-னும் நாளை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire