வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்-னுக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
ரஷ்யாவின் கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள விளாடிவொஸ்ரொக் நகருக்கு அருகேயுள்ள ருஸ்கி தீவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, ரஷ்யா – வட கொரியா இடையில் நிலவும் உறவின் நீண்ட வரலாறு குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க உதவுவதாக புட்டின் உறுதியளித்தார்.
ஏற்கனவே நீண்ட நட்பும் வரலாறும் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் உறுதியான சந்திப்பாக இது அமையும் என நம்புவதாக கிம் ஜொங் உன் குறிப்பிட்டுள்ளார்.