ஃபனி புயல் தமிழகத்தை தாக்கும் - சென்னை வானிலை மையம்
இந்த புயல் எதிர்வரும் 30ஆம் திகதி தமிழகத்தின் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் – வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், பின்னர் அது புயலாக மாறி தமிழகத்தின் கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன்படி இந்திய பெருங்கடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்பொழுது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு காணப்படுவதுடன், அது வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளதுடன், இந்த புயல் எதிர்வரும் 30ஆம் திகதி தமிழகத்தின் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புயல் கரையை கடக்கும் சந்தர்ப்பத்தில் மணிக்கு 90 கிலோமீற்றர் தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் குறித்த வானிலை ஆய்வு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.