கனடாவில் அவசரகால நிலை பிரகடனம் - ஒட்டாவா மேயர் அறிவிப்பு
நீர்மின் அணையொன்று உடைப்பெடுக்கும் ஆபத்து காணப்படுவதாக கியூபெக் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
👤 Sivasankaran26 April 2019 3:22 PM GMT

கனடாவில் அதிகரித்துள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒட்டாவாவின் மேயர் நேற்று (வியாழக்கிழமை) அவசரகால நிலை பிரகடனம் செய்துள்ளார்.
நீர்மின் அணையொன்று உடைப்பெடுக்கும் ஆபத்து காணப்படுவதாக கியூபெக் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேரில் ஆய்வு செய்துள்ளார். காலநிலை மாற்றத்தின் விளைவாக இவ்வாறான மோசமான வானிலையை தொடர்ந்தும் எதிர்கொள்ள நேரிடும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளப்பெருக்கினால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 900க்கும் அதிகமானோர் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அரச இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire