உலகம் சுற்றும் வேலை - அழைக்கிறார் கோடீஸ்வரர்
ஊழியருக்கு மாதம் 52 ஆயிரம் டாலர்கள் வரை சம்பளம் வழங்கப்படும்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ லெப்ரே என்ற அந்த கோடீசுவரருக்கு 26 வயது. இவர் சிட்னியைச் சேர்ந்தவர்.
தனது ஈ காமர்ஸ் மற்றும் வர்த்தகப் பயிற்சி நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்காக உலகம் முழுக்கச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இவர் திட்டமிட்டுள்ளார். எனவே தன்னுடன் உலகம் சுற்ற ஊழியர் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்திருக்கிறார்.
ஊழியருக்கு மாதம் 52 ஆயிரம் டாலர்கள் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், தன்னுடன் உலகம் முழுக்கப் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சம்பளம் ஒருவரின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், பெண்கள் என்றால் அவர்களுக்கு தனியாக தங்கும் விடுதியும், உடல்நலக் காப்பீடும் எடுத்துக்கொடுக்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தி உள்ளார்.
இவரது இந்த விளம்பரம் பலரையும் ஆச்சரியப்படுத்ததுடன், யோசிக்கவும் வைத்து விட்டது.