போதைப்பொருள் கடத்தல் - கனேடியருக்கு மரண தண்டனை விதித்தது சீனா
இச்சம்பவம் கனேடிய பிரதமரின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
👤 Sivasankaran1 May 2019 3:47 PM GMT

சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கனேடியர் ஒருவருக்கு சீன நீதிமன்றத்தால் நேற்று (செவ்வாய்க்கிழமை) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டாவது கனேடியராக இவர் ஆகும்.
தன்னிச்சையாக மரண தண்டனையை நிறைவேற்றியதாக கனடா பீஜிங் மீது குற்றம் சாட்டியது. அத்துடன் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மற்றுமொரு கனேடியருக்கு சீனா மரண தண்டனை விதித்திருந்தது. இச்சம்பவம் கனேடிய பிரதமரின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire