Home » உலகச் செய்திகள் » ஒன்ராறியோ தீ விபத்து - ஐவர் உயிரிழப்பு

ஒன்ராறியோ தீ விபத்து - ஐவர் உயிரிழப்பு

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

👤 Sivasankaran3 May 2019 4:03 PM GMT
ஒன்ராறியோ தீ விபத்து - ஐவர் உயிரிழப்பு
Share Post

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் மற்றும் குழந்தைகள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்த விபத்து நடந்திருக்கிறது. எனினும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இவ்வாறான மரணங்களை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்கு அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றவுள்ளதாக ஒன்ராறியோ பிராந்திய தலைமை அதிகாரி தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய மற்றும் மாகாண அரசியல்வாதிகள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.