நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்புக்களும் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் இன்று இரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த விசேட அதிரடி படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவினால் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தபட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.