ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதிலுள்ள தாமதம் தனது தலைமைப் பதவியுடன் தொடர்புடைய பிரச்சினையல்ல என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கன்சர்வேட்டிவ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அண்ட்ரியா ஜென்கின்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற்றை வழங்குவதில் பிரதமர் தோல்வியடைந்து விட்டதாகவும் அதனால் தலைமைப்பதவியை விட்டு விலக வேண்டுமெனவும் அண்ட்ரியா ஜென்கின்ஸ் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் பிரெக்ஸிற் பிரச்சினை என்னைப் பற்றிய விடயமல்ல. என்னைப் பற்றிய விவகாரமாகவும் நான் வாக்களிப்பதன் மூலமாக தீர்மானிக்கக்கூடிய விடயமாகவும் இருந்திருந்தால் நாங்கள் எப்போதோ ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியிருப்போம் என தெரிவித்துள்ளார்.