சிறிலங்காவில் மீண்டும் வன்முறை - சிலாபம் நகரில் ஊரடங்கு
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய...
👤 Sivasankaran12 May 2019 4:07 PM GMT

சிறிலங்காவின் தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர சம்பவத்தில் இருந்து இப்போது தான் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்கு பகுதியில் அமந்துள்ள கடலோர நகரமான சிலாபம் நகரில் நேற்று இருதரப்பினருக்கு இடையில் கலவரம் வெடித்ததால் நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire