மீண்டும் நானே பிரதமராக வருவேன்- நரேந்திர மோடி
என்னுடைய வளர்ச்சி திட்டங்களுடன் புதிய ஆட்சியில் வருவேன் என கூறியுள்ளார்.
👤 Sivasankaran15 May 2019 2:40 PM GMT

இந்தியாவில் 2019 பாராளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 19-ம் திகதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பிரசாரத்தில் இந்திய பிரதமர் மோடி தீவிரமாக இறங்கியுள்ளார்.
பீகார் மாநிலம் பாடலிபுத்ராவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான கோரிக்கையை விடுத்தார்.
இந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளும் கடைசி பொதுக்கூட்டம் இதுவாகும். ஆனால் என்னுடைய வளர்ச்சி திட்டங்களுடன் புதிய ஆட்சியில் வருவேன் என கூறியுள்ளார்.
உங்களுடைய அன்பு வெற்றியின் மீதான நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. கடைசி கட்டத்தில், வெற்றிக்கான வெற்றி அழகாக இருப்பதை உறுதி செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் மோடி இருக்கிறார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire