கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய நாமல் ராஜபக்ஷ,
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் எந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் ஆதரவு வழங்க தாம் இரு முறை யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அரசாங்கத்தை எந்த நேரத்திலும் விரட்ட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை கலைக்க யோசனை ஒன்றை கொண்டு வந்தால், அதற்கு ஆதரவாக வாக்களிக்கவும் தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்திற்குள் காணப்படும் பிரச்சினைகளை மூடி மறைக்கவும், நாடும் உலகமும் பார்த்துக் கொண்டிருக்கும் பிரச்சினை ஒன்றை மறைக்கவும் அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டினார்.