ஒட்டாவாவை சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று (திங்கட்கிழமை) தாக்கியது. இந்த சூறாவளி, கனடாவின் ஒட்டாவா மற்றும் ஒன்றாரியோ, கியூபெக் உள்ளிட்ட பகுதிகளை கடுமையமாகத் தாக்கியுள்ளது.
இது குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சக்தி வாய்ந்த சூறைக்காற்றுடன் புயல் வீசியதால் வீடுகள் அதிகளவில் சேதம் அடைந்துள்ளன. ஆலங்கட்டி மற்றும் கடும்மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் குறித்த பகுதியின் பெருவீதிகள் மூடப்பட்டுள்ளன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் சூறாவளி வீசக்கூடும் எனவும், இதன்காரணமாக பொதுமக்களை மிகுந்த எச்சரிக்கையாக இருக்குமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.