போலி முகவர்களிடம் ஏமாற வேண்டாம் - கனடா எச்சரிக்கை
போலியான முகவர்களிடம் அதிகளவு பணத்தைக் கொடுத்து ஏமாந்தும் போகின்றனர்.
👤 Sivasankaran13 Jun 2019 3:00 PM GMT

தற்போது இளைஞர்கள் அனைவரும் கனடாவிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்வதை பெரிதும் விரும்புகின்றனர். எப்படி செல்வது என்பது தெரியாமல் போலியான முகவர்களிடம் அதிகளவு பணத்தைக் கொடுத்து ஏமாந்தும் போகின்றனர்.
கனடாவில் விசா பெற்றுத்தருவதாக கூறி மோடியில் ஈடுபடும் போலியான முகவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கனேடிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனடா விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான தொகை வெறும் 100 கனேடிய டொலர்கள் மாத்திரமே.
எனினும் வெளிநாடுகளுக்கு மக்களை அனுப்பும் பல போலி முகவர்கள் பெரும் தொகையை வசூலித்து வருகின்றனர்.
கனடா அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளம் ஊடாக மாத்திரமே விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire