போலந்து நாட்டிற்கு மேலும் ஆயிரம் படையினரை அனுப்ப அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
போலந்து ஜனாதிபதி அன்ட்ரஸெஜ் டுடாவுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், 'ஜேர்மனியில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் 52000 படையினரை மீள அழைக்க தீர்மானித்துள்ளோம்.
அத்துடன், ட்ரோன் மற்றும் ஏனைய இராணுவ கட்டமைப்புக்களை அங்கு நிலைநிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எனினும், ஜேர்மனியில் அமெரிக்க இராணுவத்தளம் ஒன்றை நிலையாக வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது' என்றும் கூறினார்.