பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று சேர்ந்து போரிடுவோம் - இந்திய பிரதமர் மோடி
கடந்த ஞாயிற்றுக்கிழமை (9-ம் திகதி) நான் இலங்கை பயணத்தின்போது, அங்குள்ள (கொழும்பு) புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு சென்றிருந்தேன்.

இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) தொடங்கியது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இந்திய பிரதமர் மோடி நேற்று பேசினார். பயங்கரவாதத்துக்கு எதிரான போர்தான் அவரது பேச்சில் முக்கிய இடம் பிடித்தது. இம்ரான்கான் முன்னிலையில் பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார்.
அவர் பேசுகையில்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை (9-ம் திகதி) நான் இலங்கை பயணத்தின்போது, அங்குள்ள (கொழும்பு) புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு நான் பயங்கரவாதத்தின் கொடூர முகத்தைக் கண்டேன்.
ஒவ்வொரு மனிதாபிமான சார்பு சக்திகளும், அனைத்து நாடுகளும் தங்களுடைய கட்டுப்பட்ட களத்தில் இருந்து வெளியே வரவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுவதற்கான வழிவகைகள் குறித்து விவாதிப்பதற்கு உலக அளவிலான ஒரு மாநாட்டை நடத்த வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்றும் மோடி கூறினார்.