லண்டனுக்கு புதிய மேயர் தேவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தலைநகர் லண்டனில் கடந்த 24 மணித்தியாலங்களில் சில இடங்களில் இடம்பெற்றுள்ள வன்முறைச்சம்பவங்கள் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இருவர் காயமடைந்துள்ளதுடன், 14 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ள லண்டனுக்கு புதிய மேயர் தேவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.