சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் - ஜனாதிபதி
விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பற்ற அனைவரையும் விரைவில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

தேசிய பாதுகாப்பு சபை நேற்று (ஜுன், 19) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.
அப்போது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சிறு குற்றங்கள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பற்ற அனைவரையும் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு துறையினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட ஆளுங்கட்சி, எதிர்கட்சி ஆகியவற்றின் சிரேஷ்ட மக்கள் பிரதிநிதிகளும் பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி, முப்படை தளபதிகள், புலனாய்வுத் துறை பிரதானிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறையின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.