ரொறன்ரோ பார்க்வுட் குடியிருப்பு கத்திக் குத்து சம்பவம் - விசாரணைகள் தீவிரம்
அந்த வகையில் சம்பவம் தொடர்பிலும், குறித்த அந்த நபரை அறிந்தோரிடமும், அருகே வசிப்போரிடமும் தகவல்களைச் சேகரித்து வருவதாக கூறினார்கள்.

ரொறன்ரோ பார்க்வுட் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மனிதக் கொலை குறித்த சிறப்பு விசாரணைப் பிரிவினர் அழைக்கப்பட்டுள்ள நிலையில், கொலையுண்டவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் சம்பவம் தொடர்பிலும், குறித்த அந்த நபரை அறிந்தோரிடமும், அருகே வசிப்போரிடமும் தகவல்களைச் சேகரித்து வருவதாகவும், அந்த பகுதியில் இருந்து பெறப்படும் கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களையும் ஆய்வு செய்து வருவதாகவும் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது, கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் 61 வயது ஆண் எனவும், அவர் அங்கேயே வசிப்பவர் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.