Home » உலகச் செய்திகள் » சார்ஜா மன்னரின் மகன் மறைவு - மூன்று நாட்கள் துக்கம்

சார்ஜா மன்னரின் மகன் மறைவு - மூன்று நாட்கள் துக்கம்

ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி திங்கட்கிழமை காலமானார்.

👤 Sivasankaran3 July 2019 5:13 PM GMT
சார்ஜா மன்னரின் மகன் மறைவு -  மூன்று நாட்கள் துக்கம்
Share Post

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவை சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி ஆட்சி செய்து வருகிறார். இவரது மகன் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி (வயது 39), கடந்த 2008 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் காஸ்மி என்ற ஆண்கள் ஆடைகள் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அதன் பிரதான கடை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள சோஹோவில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி திங்கட்கிழமை காலமானார். அவரது மறைவு குறித்த செய்தியை ஐக்கிய அமீரக ஆட்சியாளர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

சார்ஜா மன்னர் மகன் மறைவையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நாட்டில் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.