இருவேறு நிறங்களில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் - நீதிமன்றத்தின் தீர்ப்பு
காம்சி என்று பெயரிடப்பட்ட ஆண் குழந்தையும், காச்சி என்று பெயரிடப்பட்ட பெண் குழந்தையும் இரட்டையர்களாகப் பிறந்தனர்.
👤 Sivasankaran4 July 2019 6:00 PM GMT

கனடாவில் இருவேறு நிறங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தமை காரணமாக ஏற்பட்ட சர்ச்சையினை நீதிமன்றம் தீர்த்து வைத்துள்ளது.
நைஜீரியாவைத் தாயகமாகக் கொண்ட ஜூடிச் வொகோசா திருமணத்திற்குப் பின்னர் கனடாவில் தங்கியுள்ளார். ஜூடிச்சுக்கு கடந்த 2016ம் ஆண்டு காம்சி என்று பெயரிடப்பட்ட ஆண் குழந்தையும், காச்சி என்று பெயரிடப்பட்ட பெண் குழந்தையும் இரட்டையர்களாகப் பிறந்தனர்.
இதில் காம்சி கருமையாகவும், காச்சி வெள்ளை நிறத்திலும் பிறந்ததால் ஜூடிச்சின் கணவர் சந்தேகம் கொண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
ஆனால் இதுபோன்ற இருவேறு நிறங்களில் குழந்தைகள் பிறப்பது அரியது என குறிப்பிட்ட நீதிமன்றம் இரு குழந்தைகளுமே ஜூடிச்சின் கணவருக்குப் பிறந்தவையே என்று சந்தேகப்பட்டவருக்கு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire