எனது பதவிக்காலத்தில் சிறிலங்காவிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உடன்படிக்கைளை வெளிநாடுகளுடன் கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிபிலை பொது விளையாட்டரங்கில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.