மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை - மஹிந்த
பொறுப்பற்ற விதமாக செயற்படும் இந்த அரசாங்கம் இனி ஆடசியில் இருக்கக் கூடாது.

குருநாகலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பேசினார்.
" தங்களுடைய இனத்துக்கு பாதுகாப்பு இல்லை என முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சகோதரர் என்னிடம் கூறினார்.
உண்மையாகவே நாட்டில் தற்போது சிங்கள், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவம் என அனைத்து மக்களும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
ஆனால் அரசாங்கம் தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களையும் கைது செய்து விட்டோம் இனி எந்ததொரு பிரச்சினையும் இல்லையென கூறுகின்றது.
ஆனால் ஊடகங்களில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன.
இந்நிலையில் அரசாங்கம் என்ன செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. நாட்டுக்கு பொருத்தமற்ற சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதுடன் நாட்டை விற்பனை செய்யும் நடவடிக்கையே மேற்கொண்டு வருகின்றது.
எவ்வாறாயினும் பொறுப்பற்ற விதமாக செயற்படும் இந்த அரசாங்கம் இனி ஆடசியில் இருக்கக் கூடாது" என்றும் கூறினார்.