கனடா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
இந்த பகுதிகளில் கடுமையான அனல் காற்று வீசி வருகின்றது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மக்கள் Dachstein glacier பனிப்பாறை அமைந்துள்ள பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.
அங்கு செல்லும் மக்கள் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் பனி விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.