Home » உலகச் செய்திகள் » பேருக்கு தான் ஜெயில் - இருப்பதோ மருத்துவமனையில்....

பேருக்கு தான் ஜெயில் - இருப்பதோ மருத்துவமனையில்....

சிறைதண்டனை பெற்ற விஐபிக்கள் உடல்நிலையை காரணம் காட்டி பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

👤 Sivasankaran28 July 2019 4:29 PM GMT
பேருக்கு தான் ஜெயில் - இருப்பதோ மருத்துவமனையில்....
Share Post

கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், இதுவரையிலான 19 மாதங்களில் 17ஐ மருத்துவமனைகளில் கழித்துள்ளார். இது பேருக்கு ஜெயில் தண்டனை. ஊரார் பார்வையில் மருத்துவமனையில் சிகிச்சை என்றாகிவிட்டது.

சிறைதண்டனை பெற்ற விஐபிக்கள் உடல்நிலையை காரணம் காட்டி பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் இணைந்துள்ளவர், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்,71.

பீஹாரில் முதல்வராக இருந்த போது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நான்கு வழக்குகளில் அவருக்கு, மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் ஒரு வழக்கில் அவருக்கு ஜாமின் சமீபத்தில் தான் கிடைத்தது. 2017 டிசம்பர் 23 ல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், 2 மாதத்தில், உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, ராஞ்சியில் உள்ள ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு உடல்நிலை தேறியதை தொடர்ந்து, 2018 மே மாதம், மீண்டும் ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர், மகன் திருமணத்திற்கு லாலு ஜாமினில் வந்தார். தொடர்ந்து, மும்பையில் சிகிச்சை பெற வேண்டும் எனக்கூறி, நீண்ட ஜாமின் வாங்கினார். மும்பையில் சிகிச்சை பெற்ற பின்னர் 2018 ஆகஸ்ட் மாதம் ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனைக்கு திரும்பினார். அப்பேது முதல், தற்போது வரை, அதே மருத்துவமனையில், ஏசி உள்ளிட்டபல சகல சொகுசான வசதிகளுடன் கூடிய அறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.