Home » உலகச் செய்திகள் » சிகிச்சைக்கு வந்த ​நோயாளி அச்சுறுத்தி என்னுடன் உறவில் ஈடுபட்டார் - மருத்துவர் தீபா விளக்கம்

சிகிச்சைக்கு வந்த ​நோயாளி அச்சுறுத்தி என்னுடன் உறவில் ஈடுபட்டார் - மருத்துவர் தீபா விளக்கம்

தன்னை உணர்வு ரீதியாக கட்டுப்படுத்தி அந்த நோயாளி பயன்படுத்திக்கொண்டார் என்றும் ஆபாச செல்பிக்களை மிரட்டி அனுப்ப வைத்தார்.

👤 Sivasankaran29 July 2019 4:42 PM GMT
சிகிச்சைக்கு வந்த ​நோயாளி அச்சுறுத்தி என்னுடன் உறவில் ஈடுபட்டார் - மருத்துவர் தீபா விளக்கம்
Share Post

புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கடந்த ஜனவரி மாதம் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. தற்போது தன்மீதான குற்றச்சாட்டை தீபா மறுத்துள்ளார். அத்துடன் தன்னிலை விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.

"சிகிச்சைக்காக வந்த ஒருவர் என்னை மிரட்டினார், ஆபாச செல்பிக்களை அனுப்பச்சொன்னார், குறுஞ்செய்திகளை மருத்துவக்கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே பாலியல் உறவு கொள்ள வைத்தார்" என்று புற்றுநோய் மருத்துவரான தீபா சுந்தரலிங்கம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.

தன்னை உணர்வு ரீதியாக கட்டுப்படுத்தி அந்த நோயாளி பயன்படுத்திக்கொண்டார் என்றும் ஆபாச செல்பிக்களை மிரட்டி அனுப்ப வைத்தார் என்றும் முறையிட்டுள்ளார். நடந்த இந்த சம்பவத்தில் தான் குற்றவாளி அல்ல என்றும், பாதிக்கப்பட்டவரே நான் தான் என்றும் கூறியுள்ளார்.

இதுநாள்வரை நோயாளி தரப்பிலான குற்றச்சாட்டினை கவனித்த மருத்துவத்துறை, தீபா தரப்பு நியாயத்தையும் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.