காதல் தோல்விகளால் விரக்தி - நாயை திருமணம் செய்த மாடல் அழகி
இதுவரை 220 ஆண்களை காதலித்தும் எந்த காதலும் வெற்றி அடையவில்லை.
👤 Sivasankaran2 Aug 2019 3:10 PM GMT

இங்கிலாந்து நாட்டின் கிழக்கு எஸ்கார்ட் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஹோட். பிரபல மாடல் அழகியான எலிசபெத்துக்கு தற்போது வயது 49.
இவர் கடந்த வாரம், தான் வளர்க்கும் நாயுடன் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அறிவித்தது போலவே இன்று தனது நாயை திருமணம் செய்து கொண்டார். இதுவரை 220 ஆண்களை காதலித்தும் எந்த காதலும் வெற்றி அடையவில்லை.
'என்னுடைய தோழிகள் பலரும், ஆண்களை காட்டிலும் நாயை திருமணம் செய்துக்கொள்ளலாம் என விரும்பி இருக்கிறார்கள்' என்று விநோதமான இந்த நடைமுறைக்கு விளக்கம் கொடுத்துள்ளார் எலிசபெத்.
இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஒரு தரப்பினர் இவரின் முடிவுக்கு ஆதரவும், மற்றொரு தரப்பினர் இவருக்கு மருத்துவ உதவி தேவை என்றும் கூறியுள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire