Home » உலகச் செய்திகள் » காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம் - ரணில்

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம் - ரணில்

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அமெரிக்கா தெரிவித்து விட்டது.

👤 Sivasankaran6 Aug 2019 3:19 PM GMT
காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம் - ரணில்
Share Post

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியாவின் மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இந்த சூழலில், காஷ்மீர் விவகாரத்தில், உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அமெரிக்கா தெரிவித்து விட்டது.

அதைப் போலவே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம் என்று சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- " லடாக்கில் தற்போது 70 சதவீத புத்த மதத்தினர் உள்ளனர். புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள முதல் இந்திய மாநிலமாக (யூனியன் பிரதேசம்) லடாக் மாற உள்ளது. நாம் சுற்றுலா செல்வதற்கு லடாக் அழகான பகுதி. காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம்" என தெரிவித்துள்ளார்.