ரொறன்ரோவின் கிழக்கு யோரக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில், உயிரிழந்தவர் 29 வயதான கெவீன் ரெட்டிக் என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர். வகுண்டா பிளேஸ் மற்றும் ஓ'கானர் டிரைவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் ரொறன்ரோவை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்த விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.