சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சசிகலா பிறந்த நாளை கொண்டாடுவார். ஜெயலலிதா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று போயஸ் கார்டனில் உள்ளவர்களுக்கு மட்டும் இனிப்பு வழங்குவார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக அவர் பிறந்த நாள் கொண்டாடவில்லை.
இன்றைய தினம் அவரது பிறந்த நாள் என்றாலும் சிறையில் அவர் மவுன விரதம் இருந்து வருகிறார். யாரிடமும் இன்று பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார்.