Home » உலகச் செய்திகள் » ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படாது - டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படாது - டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தலீபான் பயங்கரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்களை...

👤 Sivasankaran21 Aug 2019 3:20 PM GMT
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படாது - டிரம்ப்
Share Post

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தலீபான் பயங்கரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. எனினும் தலீபான்களை முழுமையாக வீழ்த்த முடியாமல் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகள் திணறி வருகின்றன. இந்த உள்நாட்டு போரில் அப்பாவி மக்கள் அதிகமாக கொல்லப்படுகிறார்கள்.

இதன் காரணமாக உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக தலீபான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே இதுவரை 8 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து ஏற்பட்டு இருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கை இருதரப்பின் தலைமையும் முடிவு செய்வார்கள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படாது என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். பிராந்திய ஸ்திரதன்மையை உறுதி செய்ய சில வீரர்கள் அங்கு தொடர்ந்து இருப்பார்கள் எனவும் டிரம்ப் கூறினார்.