தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்த நாட்டை மீட்டெடுக்க முடியும் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் ருவான்வெலி சாய விகாராதிபதியை சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை கூறினார்.
நாட்டின் எல்லா பகுதிகளிலும் இன்று பொருளாதார நெருக்கடி நிலை உணரப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக பதவிவகிக்க விருப்பம் இல்லை எனவும் ஆனால் நாட்டை நிர்வகிக்க தான் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அது அரசியல் ரீதியாகவா அல்லது உத்தியோகத்தராக என காலம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.