எட்மண்டன் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5:50 மணியளவில், 102ஆவது வீதியில் உள்ள ஜாஸ்பர் அவென்யூவின் தெற்கே இருந்து வடக்கு நோக்கி, 73 வயதான முதியவர் நடந்து செல்லும் போது வாகனத்தில் வந்த சாரதி மோதிவிட்டு சென்றிருக்கிறார்.
குறித்த வாகன சாரதியை அடையாளங் கண்டு கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்த விபத்தில் காயம் அடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு சிறிய கருப்பு எஸ்யூவி அல்லது ஹேட்ச்பேக் ரக வாகனம் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.