Home » உலகச் செய்திகள் » அறநெறிப் பாடசாலைகளையும் மத்ரசாக்களையும் கட்டி எழுப்புவேன் - சஜித்

அறநெறிப் பாடசாலைகளையும் மத்ரசாக்களையும் கட்டி எழுப்புவேன் - சஜித்

கத்தோலிக்க அறநெறிப் பாடசாலைகளையும் மத்ரசாக்களையும் கட்டி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran8 Sep 2019 3:30 PM GMT
அறநெறிப் பாடசாலைகளையும் மத்ரசாக்களையும் கட்டி எழுப்புவேன் - சஜித்
Share Post

நவம்பர் அல்லது டிசம்பர் மாதமளவில் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு நாட்டு மக்கள் சக்தி வழங்குவார்கள் என தான் நம்பிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் விகாரைகளை கட்டி எழுப்புவது போன்று இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் கத்தோலிக்க அறநெறிப் பாடசாலைகளையும் மத்ரசாக்களையும் கட்டி எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அதுவே பௌத்த தர்மம் எனும் தூய்மையான பௌத்த தர்மத்தில் பௌத்த மதத்தை பாதுகாப்பதை போன்று ஏனைய மதங்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.