ஸ்கார்பாரோவில் கொடூர கொலை - பொலிஸார் தீவிர விசாரணை
நேற்று (புதன்கிழமை) மாலை 6:15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
👤 Sivasankaran12 Sep 2019 3:30 PM GMT

ஸ்கார்பாரோவில் பெண்ணொருவர் தாக்குதலுக்குப் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோரிஷ் மற்றும் எல்லெஸ்மியர் வீதிப் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 6:15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒரு ஆண், பெண்ணொருவரை கொடூரமாக தாக்கிவிட்டு காரொன்றில் தப்பியேடியதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடத்திய அந்த ஆண், தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாகவும், இவர்கள் இருவருக்குமே 30 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire