Home » உலகச் செய்திகள் » கிரோஸ்அயன் மில்ஸ் வர்த்தக வளாக துப்பாக்கிச் சூடு - பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்
கிரோஸ்அயன் மில்ஸ் வர்த்தக வளாக துப்பாக்கிச் சூடு - பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்
விசாரணைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
👤 Sivasankaran18 Sep 2019 4:18 PM GMT

கல்கரியின் வடபகுதியில் அமைந்துள்ள கிரோஸ்அயன் மில்ஸ் வர்த்தக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
திட்டமிட்டு குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படும் இந்த தாக்குதலில், படுகாயமடைந்த ஆண் ஒருவர், தற்போது ப்புத்ஹில்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் அடையாளங்கள் உள்ளிட்ட விபரங்கள் எவையும் வெளியிடவில்லை. பொலிஸார் இந்த சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire