Home » உலகச் செய்திகள் » பிரதமர் ரணிலின் கூற்று, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கே - அங்கஜன் இராமநாதன்

பிரதமர் ரணிலின் கூற்று, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கே - அங்கஜன் இராமநாதன்

தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

👤 Sivasankaran18 Sep 2019 5:05 PM GMT
பிரதமர் ரணிலின் கூற்று, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கே - அங்கஜன் இராமநாதன்
Share Post

"இன்னும் ஓர் ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்" என்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூற்று, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே என, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பில் இன்று (18) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அங்கஜன் இராமநாதன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுமே, தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.