இராணுவ வீரர்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள் - சஜித் பிரேமதாச
ஜனாதிபதி இராணுவ வீரர்களின் நன்மைக்காக பயனுள்ள யோசனை ஒன்றை இன்று அமைச்சரவையில் முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தான் இராணுவ வீரர்களை கடவுளை போல் பார்ப்பதாகவும் அவர்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறினார்.
ஜனாதிபதி இராணுவ வீரர்களின் நன்மைக்காக பயனுள்ள யோசனை ஒன்றை இன்று அமைச்சரவையில் முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவ வீரர்கள் குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதா? என ஊடகவியலாளர்கள் வினவியதற்கு பதிலளிக்கும் போதே இதனை கூறிய அமைச்சர் மழைக் காரணமாக தான் தாமதித்தே அமைச்சரவை கூட்டத்திற்கு பங்கேற்றதாகவும் கூறினார்.
அதுவரை பல்வேறு விடயங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரவை பத்திரங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாகவும் அதனால் அவை தொடர்பில் தனக்கு போதிய தெளிவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.