சஜித் யானை சின்னத்தை இழந்தார் - பந்துல குணவர்தன
பாரிய பிளவுகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
👤 Sivasankaran28 Sep 2019 3:22 PM GMT

பயங்கரவாதிகளின் ஆதரவுடன் சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போது இதனை தெரிவித்தார்.
பல நிபந்தனைகளுக்கு இணங்கி மற்றும் பாரிய பிளவுகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire