Home » உலகச் செய்திகள் » அதிக உயிர்களை குடிக்கும் ஃபெண்டானைல் - ஆய்வின் அதிர்ச்சி தகவல்

அதிக உயிர்களை குடிக்கும் ஃபெண்டானைல் - ஆய்வின் அதிர்ச்சி தகவல்

ஆறு மாதங்களில் 116 ஃபெண்டானில் தொடர்பான இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

👤 Sivasankaran1 Oct 2019 2:35 PM GMT
அதிக உயிர்களை குடிக்கும் ஃபெண்டானைல் - ஆய்வின் அதிர்ச்சி தகவல்
Share Post

கல்கரியில் 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில், அதிகமான இறப்புக்கள் ஃபெண்டானைல் போதை மருந்தினாலே சம்பவித்துள்ளதாக, ஆல்பர்ட்டாவின் ஓபியாய்ட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கல்கரியில் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 116 ஃபெண்டானில் தொடர்பான இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

எட்மண்டனில் 80 பேர் இறந்துள்ளதாகவும், கிராண்டே ப்ரேரியில் 19 பேர் உயரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 81 சதவீதம், நேரடியான ஃபெண்டானிலுடன் தொடர்புடைய இறப்புகள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.